“அவர் என் சகோதரி உடன் படுக்கையில் இருப்பார்” என வெளிப்படையாக கூறிய டு பிளெஸ்ஸிஸ்..!
- வேகப்பந்து வீச்சாளர்கள் ஹார்டஸ் வில்ஜோயனுக்கும் டு பிளெஸ்ஸிஸ் சகோதரி ரெமி ரைனர்ஸை கடந்த சனிக்கிழமை திருமணம் செய்து கொண்டனர்.
- அதனால் டு பிளெஸ்ஸிஸ் ” அவர் என் சகோதரி உடன் படுக்கையில் இருப்பார்” என வெளிப்படையாகக் கூறினார்.
தென்னாபிரிக்காவில் உள்ளூர் போட்டியான மசான்சி சூப்பர் லீக் போட்டி நடைபெற்று வருகிறது.கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் பார்ல் ராக்ஸ் Vs நெல்சன் மண்டேலா அணியும் மோதின.
இப்போட்டியில் நெல்சன் மண்டேலா அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. டாஸ் போடுவதற்கு முன் பார்ல் ராக்ஸ் அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் இடம் அணியின் வீரர்கள் மாற்றம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த டு பிளெஸ்ஸிஸ் வேகப்பந்து வீச்சாளர் ஹார்டஸ் வில்ஜோயன் இன்று விளையாடமாட்டார். ஏனென்றால் அவருக்கு நேற்று தான் திருமணம் நடந்தது. அதனால் ” அவர் என் சகோதரி உடன் படிக்கையில் இருப்பார்” என வெளிப்படையாகக் கூறினார்.இதை கேட்டதும் வர்ணனையாளர் சிரித்து விட்டார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
Faf du Plessis “Hardus Viljoen is not playing today cos he is lying in bed with my sister. They got married yesterday.” This is hilarious ???????????? pic.twitter.com/1AwHQnrUtC
— Mazher Arshad (@MazherArshad) December 8, 2019
வேகப்பந்து வீச்சாளர்கள் ஹார்டஸ் வில்ஜோயனுக்கும் டு பிளெஸ்ஸிஸ் சகோதரி ரெமி ரைனர்ஸை கடந்த சனிக்கிழமை திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.