ஐபிஎல் தொடருக்கான ஸ்பான்ஸராக ட்ரீம் 11 நிறுவனம், ரூ.222 கோடிக்கு தேர்வு செய்யாட்டுள்ளதாக ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி முதல் நவம்பர் 10 -ம் தேதி வரை நடைபெறும் என ஐபிஎல் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்துள்ளார்.
இந்த தொடரில் விளையாடவுள்ள 8 அணிகள், ஆர்வமாகவும், தீவிரமாகவும் பயிற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். இந்தநிலையில், ஐபிஎல் தொடருக்கான ஸ்பான்ஸரிலிருந்து சீன நிறுவனமான விவோ விலகியது.
இதனைதொடர்ந்து, ஐபிஎல் தொடருக்கான ஸ்பான்ஸர்களுக்கு பிசிசிஐ அழைப்பு விடுத்த நிலையில், இந்தியாவின் முன்னனி நிறுவனங்கள் டைடில் ஸ்பான்சர்ஷிப்க்கான போட்டியில் களமிறங்கியுள்ளனர். மேலும், ஸ்பான்சர்ஷிப்க்கான தொகையாக ரூ.300 கோடியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
அந்தவகையில், இந்தியாவின் முன்னணி நிறுவனங்களாக ட்ரீம் 11, பைசூஸ், டாடா, அன்ஹக்கேடமி, பதஞ்சலி போன்ற நிறுவனங்கள் களமிறங்கியுள்ளனர். இந்த ஐபிஎல் தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் யார் என பிசிசிஐ இன்று அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த ஏலத்தில் ட்ரீம் 11 நிறுவனத்துடன் ரூ.222 கோடிக்கு ஒப்பந்தம் செய்யாட்டுள்ளதாக ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக புதிய அதிரடியான வரி உத்தரவை…
பெங்களூர் : ஆர்சிபி அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி,…
சென்னை : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்றைய தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில்,…
சென்னை : கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…