CSK : ஓபனரா களமிறங்க முடிவு செய்யாத ருதுராஜ் கெய்க்வாட்? முக்கியமான 2 காரணங்கள்!
ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் 2025ல் சிஎஸ்கே அணிக்காக நம்பர் 3 இடத்தில் விளையாட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை : ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணியின் கேப்டனாக விளையாடி வரும் ருதுராஜ் கெய்க்வாட் தோனி தலைமையில் விளையாடி கொண்டிருந்த சமயத்தில் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி விளையாடி வந்தார். பின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு அவரால் தொடக்க ஆட்டக்கார வீரராக விளையாட முடியாத சுழலும் ஏற்பட்டது.
அந்த இடத்தை ராசின் ரவிந்திராவுக்கு விட்டுக்கொடுத்து அவரை தொடக்க ஆட்டக்காரராக விளையாட வாய்ப்பு வழங்கினார். அவர் நம்பர் 3-வது இடத்தில் வந்து விளையாடினார். கடந்த சீசனை போலவே, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளும் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க ஆட்டக்காரராக விளையாட வாய்ப்பு குறைவு என தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது.
அவர் அடுத்த ஆண்டும் தொடக்க ஆட்டக்காரராக விளையாடதற்கு 3 முக்கிய காரணங்களும் உள்ளதாக சொல்லப்படுகிறது. அது என்ன காரணங்கள் என்பது பற்றி பார்ப்போம்.
இந்திய அணியில் இடம்பிடிக்க
ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்தாலும் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது ரசிகர்களுக்கும் அவருக்கும் ஒரு ஏமாற்றமான விஷயமாகவே உள்ளது. அவர் இடம் பெறவில்லை என்பதற்கான முக்கிய காரணமே அவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி பவர் பிளேயில் ரன்கள் குவிக்க முடியாதது தான் அதற்கான விமர்சனமாக இருந்து வருகிறது.
அதே சமயம், சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீச வந்தால் அவர்களை எதிர்கொள்வதில் சிறந்த ஒரு வீரராக ருதுராஜ் கெய்க்வாட் திகழ்கிறார். எனவே, மிடில் வரிசையில் களமிறங்கி, மிரட்டலாக விளையாடினால் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே அவர் நம்பர் 3 இடத்தில் இறங்கி விளையாடுவது இதுவும் ஒரு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.
அனுபவவீரர்கள் பட்டியலில் இடம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நம்பர் 3 இடத்தில் விளையாடினாள் அந்த இடம் ஒரு அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கான இடமாகவே மாறிவிடுகிறது என்றே சொல்லலாம். ஏனென்றால், சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, அஜிங்கிய ரஹானே போன்ற அனுபவ வீரர்கள் சென்னை அணிக்காக நம்பர் 3 இடத்தில் தான் விளையாடியுள்ளார்கள். இதில் சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, ஆகிய வீரர்கள் ஓய்வு பெற்ற போதிலும் கூட அவர்களுடைய பெயர் நிலைத்து நிற்கும் ஒரு பெயராக உள்ளது. எனவே, கெய்க்வாட் மூன்றாவது இடத்தில் இறங்கினால், சிஎஸ்கே அனுபவத்தைப் பெறுவதோடு, மிடில் ஆர்டரில் சிறந்த ஒரு வீரராகவும் தனது பெயரை பதித்துக்கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!
February 22, 2025
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025