ஷிகர் தவான் வேண்டவே வேண்டாம்…கங்குலி சொல்லியும் மறுத்த ரிக்கி பாண்டிங்!
கங்குலியின் வற்புறுத்தலுக்குப் பிறகும் தவானை டெல்லிக்குக் கொண்டுவர பாண்டிங் ஆரம்பத்தில் தயக்கம் காட்டினார் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கைஃப் தெரிவித்துள்ளார்.
டெல்லி : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியை எந்த வீரர் கேப்டனாக விளையாடி வழிநடத்தப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள சூழலில், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட ஒவ்வொரு வீரர்களுடைய பெயர்கள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. இந்த சூழலில், கடந்த 2018-ஆம் ஆண்டு டெல்லி அணியில் கேப்டனாக ஷிகர் தவானை தேர்வு செய்யத் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தடையாக இருந்தார் என முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தெரிவித்தார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் வீடியோ ஒன்றையும் வெளியீட்டுப் பேசியுள்ளார். அதில் அவர் பேசியபோது ” ஷிகர் தவான் ஹைதராபாத் அணிக்காக விளையாடி முடித்த பிறகு 2019-ஆம் ஆண்டு ஏலத்தில் டெல்லி அணி அவரை தங்களுடைய அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யத் திட்டமிட்டு இருந்தது. 2018 ஆண்டு தான், டெல்லி அணிக்குத் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டி இருந்தார்.
ஷிகர் தவானை தங்களுடைய அணியில் ஏலத்தில் எடுக்கத் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஒற்றுக்கொள்ளவில்லை. கிரிக்கெட் இயக்குநரான கங்குலி, தவானைச் சேர்ப்பதற்கு ஆதரவு தெரிவித்து சில விஷயங்களை பேசியபோதும் கூட ரிங்கி பாண்டிங் அதற்கு உடன் படவில்லை. ஏனென்றால், ஷிகர் தவான் கிரிக்கெட் வாழ்க்கை முடியும் தருணத்தில் இருப்பதாக ஒரு விஷயத்தை பாண்டிங் முன்வைத்துள்ளார்.
பாண்டிங்கின் எதிர்ப்புக்குப் பின், கங்குலி மற்றும் அணி நிர்வாகம் இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்த காரணத்தால். தவான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திலிருந்து டெல்லி கேபிடல்ஸுக்கு மாறினார். தவானின் வருகை அணி உரிமையாளருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது, ஏனென்றால் அவர் டெல்லி அணி முக்கிய வீரராக மாறினார். 2020-ல் அவரது தலைமையின் கீழ் டெல்லி, ஐபிஎல் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
பாண்டிங் அணியைச் சிறப்பாக நிர்வகித்திருந்தால், அவர் தலைமைப் பயிற்சியாளராக இருந்த காலத்தில் டெல்லி ஐபிஎல் பட்டத்தை வென்றிருக்கலாம் எனவும் “வெளிப்படையாகவே பேசி ஷிகர் தவானை ஏலத்தில் எடுக்க அந்த சமயம் பாண்டிங் மறுத்த ஆதங்கத்தையும் முகமது கைஃப் கூறியுள்ளார்.