இறுதிப்போட்டியில் மைதானம் ‘பின்-டிராப்’ சைலன்ட் ஆனது எப்போது தெரியுமா..?

இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 240 ரன்களுக்கு சுருண்டது. கே.எல் ராகுல் 66 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும், ரோகித் சர்மா 47 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டை பறித்தனர்.

241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. அதன்படி டேவிட் வார்னர் (07 ), மிட்செல் மார்ஷ் (15), ஸ்டீவ் ஸ்மித் (04) ரன்கள் மட்டும் எடுத்து பெரிய இன்னிங்ஸ் ஆட முடியாமல் போனது. ஆனால் டிராவிஸ் ஹெட் அபார சதம் அடித்ததால் இந்தியாவின்  நம்பிக்கை முற்றிலும் தகர்ந்தது.

டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லாபுசேன் இடையே 192 ரன்கள் பார்ட்னர்ஷிப் இருந்தது. டிராவிஸ் ஹெட் 120 பந்துகளில் 137 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மார்னஸ் லாபுசாக்னே ஆட்டமிழக்காமல் 110 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். இறுதியாக ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

‘பின்-டிராப்’ சைலன்ட்:

இந்த போட்டியில் விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் இடையே ஒரு பார்ட்னர்ஷிப் உருவானது. இதைத் தொடர்ந்து விராட் கோலி அரைசதம் அடித்து 51-வது சதத்தை  நோக்கி விராட் கோலி சென்று கொண்டிருந்தபோது 29வது ஓவரின் மூன்றாவது பந்தில் கன்மின்ஸ் வீசிய பந்து விராட் கோலி பேட்டில் பட்டு ஸ்டெம்பில் அடித்தது.   அதை சிறிது கூட விராட் கோலி முதல் ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.

அந்த தருணத்தில் மைதானத்தில் அமர்ந்திருந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அனைவரும் அமைதியானார்கள். விராட் கோலி விக்கெட்டை இழந்தபோது மைதானம் ‘பின்-டிராப்’ சைலன்ட் ஆனது. விராட் கோலியின் விக்கெட் எவ்வளவு முக்கியம் என்பது மைதானத்தில் இருந்த அனைத்து ரசிகர்களும் மட்டுமல்லாமல் அனைவரும் தெரிந்த ஒன்றே.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்