காதலியை கரம்பிடிக்கிறார் மேக்னஸ் கார்ல்சன்.. எப்போது தெரியுமா?
மேக்னஸ் கார்ல்சன் இந்த வார இறுதியில் தனது காதலியான எல்லா விக்டோரியா மலோனை திருமணம் செய்து கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நார்வே: உலகின் நம்பர்.1 செஸ் வீரரும் ஐந்து முறை உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் தனது காதலியான 26 வயதான எல்லா விக்டோரியா மலோனை மலோனை கரம்பிடிக்க விருக்கிறார். இந்த வார இறுதியில் திருமணம் செய்ய உள்ளதாக நார்வே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இது வரை தங்கள் உறவை தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்தாமல் இருக்கும் இந்த ஜோடி, நெருங்கிய குடும்பத்தினர்கள் திருமணம் செய்து கொள்வதாக கூறப்படுகிறது. இருந்தாலும், இருவரும் தங்கள் திருமணத்தின் நேரம் அல்லது இடம் பற்றிய தகவலை வெளியிட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
மேக்னஸ் கார்ல்சன் மற்றும் எல்லா விக்டோரியா மலோன் ஆகியோர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஃப்ரீஸ்டைல் செஸ் போட்டியின் போது, முதல் முறையாக பொதுவில் ஒன்றாகக் காணப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போதிருந்து, மலோன் அடுத்தடுத்த போட்டிகளின் போது, தவறாமல் கார்ல்சனுடன் வந்துள்ளார். சமீபத்தில் ஒஸ்லோவில் நடந்த சாம்பியன்ஸ் செஸ் டூர் பைனல்ஸ் மற்றும் டிசம்பர் இறுதியில் நியூயார்க்கில் நடந்த உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் கலந்து கொண்டார்கள்.
இதில், அமெரிக்காவில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், நார்வேயின் கார்ல்சன் மற்றும் ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி ஆகிய இருவரும் கூட்டாக சாம்பியன் பட்டம் வென்றனர். இதன் மூலம் பிளிட்ஸ் செஸ் வரலாற்றில் முதல்முறையாக இருவர் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.