சர்வதேச வெள்ளை பந்து கிரிக்கெட் தொடரில் இருந்து 7-ம் நம்பர் ஜெர்சிக்கு ஓய்வு அறிவிப்பதை நம்புகிறேன் என இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக நேற்று தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் தெரிவித்தார். அவர் ஓய்வு பெரும் செய்தி, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
எல்லா நேரத்திலும் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராகவும், இந்தியாவுக்காக விளையாடிய மிகச் சிறந்த விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் இருக்கும் தோனி, தனது சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் முழுவதும் 7 -ம் நம்பர் ஜெர்சியை அணிந்திருந்தார்.
இந்தநிலையில், முன்னாள் இந்திய கேப்டனான தோனியை கவுரவிப்பதற்காக, அவர் அணிந்த 7-ம் நம்பர் ஜெர்சிக்கு ஓய்வு அறிவிக்கும் என நம்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் வலியுறுத்தினார். மேலும், தோனியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
அந்த பதிவில், உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்குப் பிறகு எடுக்கப்பட்ட கடைசி புகைப்படம் இதுதான்எனவும், அந்த பயணத்தில் பல நினைவுகள் உள்ளதாகவும், சர்வதேச வெள்ளை பந்து கிரிக்கெட் தொடரில் இருந்து 7-ம் நம்பர் ஜெர்சிக்கு பி.சி.சி.ஐ. ஓய்வு அறிவிக்கும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, உங்கள் வாழ்க்கையின் இரண்டாம் இன்னிங்ஸுக்கு வாழ்த்துக்கள் எனவும், உங்களுக்கு நிறைய ஆச்சரியங்கள் இருக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…