ஏடிபி பைனல்ஸ் தொடரின் பட்டத்தை ஆறாவது முறையாக வென்று ஜோகோவிச், ரோஜர் ஃபெடெரரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
தனது கடினமான ஓராண்டிற்கு பிறகு இந்த ஏடிபி பைனல்ஸ் தொடரின் பட்டத்தை ஆறாவது முறையாக வெல்வது மனதுக்கு திருப்தியாக உள்ளது என்று போட்டிக்கு பின் அளித்த பேட்டியில் நோவாக் ஜோகோவிச் தெரிவித்தார்.
21 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சேர்பியாவைச் சேர்ந்த நோவாக் ஜோகோவிச், ஏடிபி பைனல்ஸ் தொடரின் இறுதிப்போட்டியில் நார்வே நாட்டின் கேஸ்பர் ரூட் க்கு எதிராக விளையாடினார். இந்த போட்டியில் ஜோகோவிச், 7-5, 6-3 என்ற செட் கணக்கில் கேஸ்பர் ரூட்டை தோற்கடித்தார்.
இதன் மூலம் நோவாக் ஜோகோவிச், ஆறு முறை ஏடிபி பைனல்ஸ் பட்டத்தை வென்ற ரோஜர் ஃபெடெரரின் சாதனையை சமன் செய்துள்ளார். இந்த ஏடிபி பைனல்ஸ் பட்டத்தை வென்ற ஜோகோவிச், பரிசுத்தொகையாக $4.7 மில்லியன்(இந்திய மதிப்பில் 39 கோடி ரூபாய்) பெற்றார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…