ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றார்.
பிரான்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது அரையிறுதியில் நோவக் ஜோகோவிச்- ரபேல் நடால் மோதினர். இந்த போட்டி 4 மணி நேரம் 22 நிமிடங்கள் நீடித்த நிலையில் 3-6, 6-3, 7-6,6-2 என்ற செட் கணக்கில் ரபேல் நடாலை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
பிரான்ஸ் ஓபன் அரையிறுதியில் ரபேல் நடால் தோல்வியை தழுவியது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில், 18 கிராண்ட்ஸ்லாம் வென்ற நோவக் ஜோகோவிச் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதி சுற்றுக்கு வந்துள்ள ஐந்தாம் நிலை வீரர் சிட்சிபாசை எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் முதல் இரண்டு செட்களை என்ற கணக்கில் 6-7 , 2-6 சிட்சிபாசை எடுத்தார். பின்னர் அடுத்த மூன்று செட்களை 6 – 3, 6 – 2, 6 – 4 என்ற கணக்கில் ஜோகோவிச் கைபற்றி பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றார். இது அவர் வென்றுள்ள 19-வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…
சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
சென்னை : வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து…