அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து 17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்ற ஜோகோவிச் தகுதி நீக்கம்!
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்ற ஜோகோவிச், தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி, தற்பொழுது நியூயோர்க்கில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்ற நோவக் ஜோகோவிசுவை ஸ்பெயின் வீரரான பாப்லோ கரீனோ பஸ்டா எதிர்கொண்டார்.
போட்டியில் முதல் செட்டை5-6 என்ற கணக்கில் தனது முதல் செட்டை ஜோகோவிச் இழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர், பந்தை வேகமாக டென்னிஸ் கோர்ட்டுக்கு வெளியே அடித்தார். அந்த பந்து, பெண் நடுவர் ஒருவரின் கழுத்தில் பலமாக பட்டது. வலியால் துடித்த அவர், சில நிமிடங்களுக்குப் பின் இயல்பு நிலைக்கு திரும்பினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக அந்தப்பெண் நடுவரிடம் சென்று மன்னிப்பு கோரி, அந்த செயல்கூறித்து விளக்கமளித்தார். ஜோகோவிச்சின் இந்த செயல்கூறித்து போட்டியில் நடுவரிடம் 10 நிமிடங்கள் பெண் அதிகாரி பேசினார்.
இதையடுத்து, அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ஜோகோவிச் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, கரீனோ பாஸ்டா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நோவக் ஜோகோவிச், சோகத்துடன் அவரை பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். ஜோகோவிச்சின் இந்த செயல், டென்னிஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.