அர்ஜென்டினாவின் பிரபல கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸியின் வருகையால், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணிக்கு ஒரு வருடத்தில் 700 மில்லியன் யூரோக்கள் வருமானம் கிடைத்துள்ளதாக ஸ்பெயினின் பிரபல பத்திரிக்கை “மார்க்கா (Marca)” தெரிவித்துள்ளது.
மேலும், மெஸ்ஸியின் அணி மாற்றத்தால் புதிய 10 ஸ்பான்சர்களையும், ஸ்பான்சர்ஷிப் கட்டணம் 3 மில்லியனில் இருந்து 8 மில்லியன் யூரோக்கள் வரை அதிகரித்துள்ளதாகவும் அர்ஜென்டினாவின் தினசரி பத்திரிக்கை எல் எகனாமிஸ்டா அறிவித்துள்ளது. நைக்(NIKE) உடனான பிஎஸ்ஜி (PSG) இன் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் ஆண்டுக்கு 75 மில்லியன் யூரோக்களைத் தருகிறது.
மேலும் மெஸ்ஸி பாரிஸ் கிளப் அணிக்காக களம் இறங்கியதிலிருந்து சமூக ஊடகங்களிலும், “கிளப்” 15 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸ்களைப் பெற்றது, மேலும் மொத்த பாலோவர்ஸ்களில் 150 மில்லியனைத் தாண்டியது என்று மார்கா குறிப்பிட்டுள்ளது. பிஎஸ்ஜி (PSG) தற்போது, பிரான்சின் அதிக இன்ஸ்டாகிராம் பாலோவர்ஸ்களைக் கொண்டுள்ள நிறுவனமாக மாறியுள்ளது என பிஎஸ்ஜி யின் இயக்குனர் ஆம்ஸ்ட்ராங் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…