அந்த விஷயத்தில் எனக்கு தோனி தான் ரோல் மாடல்- தினேஷ் கார்த்திக்..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இந்திய உள்ளூர் விளையாட்டான விஜய் ஹசாரே தொடரில் தற்போது தமிழ்நாடு அணி விளையாடிய வருகிறது. தமிழ்நாடு அணி விளையாடிய 9 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
தமிழ்நாடு தினேஷ் கார்த்திக் விஜய் தொடரில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பெங்கால் அணிக்கு எதிரான போட்டியில் 72 பந்தில் 97 ரன்களும் , மத்தியபிரதேச அணிக்கு எதிரான போட்டியில் 28பந்தில் 65 ரன்கள் அடித்து விளாசினார்.
உலக கோப்பை டி20 போட்டி வரவுள்ள நிலையில் இவரின் ஆட்டம் அனைவரையும் ஈர்த்துள்ளது. இதுபற்றி தினேஷ் கார்த்திக் கூறுகையில் கடைசியில் சில ஓவர்கள் மீதி இருக்கும் போது இப்படி ரன் அடிப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நான் முதல் நான்கு வரிசையில் களமிறங்கி பேட்டிங் செய்து ரன்கள் அடிப்பது எளிது என்பது எனக்கு தெரியும்.
ஆனால் அணி அழுத்தத்தில் இருக்கும் ரன் அடிக்க வேண்டும் என நினைக்கிறோம். தோனி இந்திய அணிக்காக பல வருடங்களாக இதை செய்துள்ளார். அவரை நானும் பின்பற்றுகிறேன். தமிழ்நாடு அணியில் ஷாரூக்கான் சிறப்பாக விளையாடுகிறார் என கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,
February 8, 2025![IND vs ENG 2nd ODI cricket match](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-vs-ENG-2nd-ODI-cricket-match.webp)
நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!
February 8, 2025![rohit sharma Kevin Pietersen](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/rohit-sharma-Kevin-Pietersen.webp)
“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!
February 8, 2025![](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-rohit-sharma-.webp)
டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!
February 8, 2025![narendra modi HAPPY](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/narendra-modi-HAPPY-.webp)