தோனி இந்திய அணிக்கு திரும்புவது எளிதான விஷயமல்ல.!

Default Image

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற உலககோப்பை அரையிறுதி போட்டிக்கு பிறகு எந்த வித போட்டிகளிலும் விளையாடவில்லை.
இதையெடுத்து தன்னுடைய எதிர்காலம் குறித்து எதுவும் கூறாமல் மவுனமாக இருந்த தோனி 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவிற்காக தன்னை தயார்படுத்திக்கொண்டு வந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக  13-வது ஐ.பி.எல். போட்டி  காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

ஐ.பி.எல். போட்டியில் தோனி விளையாடுவதை பொறுத்தே இந்திய அணியில் தோனி தேர்வு செய்யப்படுவார் என கூறியிருந்தார்.ஆனால் தற்போது ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதால் தோனியின் நிலையில் கேள்வி குறியாக உள்ளது.
இந்நிலையில் தோனி குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனிடம் கேட்ட போது, “டோனி அடுத்து என்ன செய்ய உள்ளார், என்பதை நான் கூறுவதை விட, தோனி கூறினால்  நன்றாக இருக்கும்.
கொரோனாவால் ஐ.பி.எல். போட்டிகள்  திட்டமிட்டபடி நடக்கவில்லை. இந்த பிரச்சினை எல்லாம் சரியாக சிறிது நாள்கள் ஆகும். தோனி இந்திய அணிக்கு திரும்புவது எளிதான விஷயமல்ல.

தோனிக்கு வாய்ப்பு கொடுப்பதாக இருந்தாலும் தேர்வாளர்கள் நிச்சயம் அவரது திறனை பரிசோதித்து பார்ப்பார்கள். ஏனென்றால் தோனி  நீண்ட நாள்களாக விளையாடவில்லை. பயிற்சி பெறும் ( ஐ.பி.எல் மற்றும் உள்ளுர்) போட்டிகளில் விளையாடுவது  மிகவும் முக்கியம். எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் தொடர்ந்து விளையாட வேண்டும்”என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்