தோனி தான் என்னுடைய பெஸ்ட் – கேப்டன் கோலி பெருமிதம்.!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டில் முடங்கி இருப்பதால் அனைவரும் அவர்களது உறவினர் மற்றும் நண்பர்களிடம் வீடியோ மூலம் பேசி வருகிறார்கள். அந்த வகையில் கிரிக்கெட் வீர்கள் பலர் ரசிகர்களுடன் சமூக வலைத்தளம் மூலம் நேரடியாக உரையாடி வருகிறார்கள். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் நேரலையாக வந்த கேப்டன் கோலி இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார்.
அதாவது, பேட்டிங்கின் போது உங்களுடைய சிறந்த பாட்னர் யார் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கோலி, பொதுவாக வேகமாக ஓடுபவர்களை எனக்கும் பிடிக்கும். அதுவும் ரன்களை முயற்சிசெய்யும் போது நம்மை எதிரில் விளையாடும் பேட்ஸ்மேன் புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார். அந்த வகையில் தோனிதான் என்னுடைய சிறந்த பேட்டிங் பாட்னர் என்று கூறினார். எங்கள் இருவரின் பேட்டிங் கூட்டணி இந்திய அணிக்கு சிறப்பாக இருந்துள்ளது என குறிப்பிட்டார். மேலும் தோனியை தவிர்த்து டி.வில்லியர்ஸ்-யுடன் பேட்டிங் செய்வது பிடிக்கும் என்று பீட்டர்சன் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். இறுதியாக கோலி கூறுகையில், நேர்மறை எண்ணங்களுடன் அதிக சக்தியுடன் உள்ளேன் என்று தெரிவித்தார்.
Virat Kohli’s favourite batting partner is the man who popularised his nickname and whose first Test wicket was KP (or not ????)! #WhistlePodu @imVkohli @msdhoni @ABdeVilliers17 VC: @KP24 ???????? pic.twitter.com/h8q18xRGg8
— Chennai Super Kings (@ChennaiIPL) April 3, 2020