டோனி ஓய்வு குறித்து ஐ.பி.எல். வரை காத்து இருக்க வேண்டும் ரவிசாஸ்திரி ..!
இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் இந்திய அணி அரைஇறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவி இந்திய அணி வெளியேறியது.
அதன் பிறகு இந்திய அணி விளையாடிய தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ், பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் விக்கெட் கீப்பர் டோனி விளையாடவில்லை.
இந்த நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரை வென்ற பிறகு பேசிய ரவிசாஸ்திரி,கொல்கத்தாவில் நடைபெற்ற பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கான ஏற்பாடுகளை கங்குலி மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் சங்கம் சிறப்பாக செய்து இருந்தது.
ரிஷாப் பண்ட் இளம் வீரர் தவறு செய்வது இயல்பு தான். அதை திருத்தி கொள்வது எப்படி என சிந்திக்க வேண்டும். ஒரே நாளில் சூப்பர் ஸ்டார் ஆகி விட முடியாது. கடினமாக உழைப்பதுடன் அதிகமாக தியாகமும் செய்ய வேண்டும். அப்படி செய்தால் நல்ல நிலைக்கு செல்ல முடியும் என கூறினார்.
ஐ.பி.எல். தொடருக்கு பிறகு தான் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்படும். 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக வீரர்களுக்கு காயம் ஏற்பட கூட வாய்ப்பு உள்ளது.
அதனால் யார் அணியில் இடம் பெறுவார்கள் என இப்போது கருத்து தெரிவிக்க முடியாது. டோனி ஓய்வு விஷயத்தில் ஐ.பி.எல். போட்டி வரை காத்து இருக்க வேண்டும். ஐ.பி.எல். போட்டிக்கு பின்பு தான் 20 ஓவர் உலககோப்பை அணியில் இடம் பெறும் சிறந்த வீரர்கள் யார் என முடிவு செய்யப்படும்.
கடந்த 5 ஆண்டுகளில் இந்திய அணியை திரும்பி பார்த்தால் மூன்று வகையான போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது என ரவிசாஸ்திரி கூறினார்.