தலையில் கருப்புத் துணியுடன் அமெரிக்கால கோல்ப் விளையாடும் தோனி
உலகக்கோப்பை போட்டிக்கு பின்பு தனது ஓய்வை தோனி அறிவிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் இந்திய ராணுவத்தில் இரண்டு மாதங்கள் பயிற்சி பெற அனுமதி கிடைத்தது. இதனையடுத்து அவர் பாராசூட் ரெஜிமென்ட் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார் பின்பு அவர் காஷ்மீரில் உள்ள விக்டர் படையுடன் சேர்ந்து ரோந்து பணியிலும் மேற்கொண்டார்.
அதன்பின்பு தனது சொந்த ஊருக்குத் திரும்பிய தோனி ராணுவ வீரர்கள் போல் தலையில் கருப்பு துணியுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது.
தற்பொழுது தோனி அமெரிக்காவில் உள்ள கோல்ப் மைதானத்தில் கேதர் ஜாதவ் உடன் கோல்ஃப் விளையாடும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதிலும் தோனி தலையில் கருப்பு துணி கட்டி உள்ளார். இந்த பதிவை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கேதர் ஜாதவ் அனைவருக்கும் தேசிய விளையாட்டு தின வாழ்த்துக்கள் என்றும் ஹாக்கியில் புகழ்பெற்ற வீரர் தியான் சந்தை நினைவுகூறும் விதமாக பதிவிட்டுள்ளார்.