இந்திய அணி நியூஸிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்றுள்ளது. இதில் முதல் டி20 ஆக்லாந்து மைதானத்தில் போட்டி நடைபெற்றது. பின்னர் எதிர்கொண்ட இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றியுடன் துவக்கியுள்ளது. அதில் இந்திய அணி 204 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடி 19 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபாரமாக வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது போட்டி 26-ம் தேதி (நாளை)அதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதனிடையே, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதை அண்மைக்காலமாக தவிர்த்துவரும் முன்னாள் கேப்டன் தோனி, விரைவில் ஓய்வுபெற வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரத்தில் அவ்வப்போது கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரவி சாஸ்திரி, நடப்பாண்டு ஐபிஎல் தொடர், தோனியின் கிரிக்கெட் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என குறிப்பிட்டார். ஒருவேளை, வருகிற ஐபிஎல் தொடர் தோனிக்கு சிறப்பாக அமையாத பட்சத்தில், அவர் தனது ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாக ரவி சாஸ்திரி தோனியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சிகரமான தகவல் தெரிவித்தார்.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…