ஆர்சிபிக்கு கப் அடிச்சு கொடுங்க! ரசிகர் கேள்விக்கு பதில் அளித்த தோனி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதய சென்னை அணியின் கேப்டனுமான தோனி படைத்த சாதனைகளை பற்றி சொல்லி தான் தெரிய வேண்டும் என்று இல்லை. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்று இருந்தாலும் இன்னும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி கொண்டு வருகிறார். சென்னை அணிக்காக விளையாடிய அவர் 5 முறை கோப்பையை வென்று கொடுத்து இருக்கிறார்.
இப்படி சிறந்த கேப்டனாக தோனி இருப்பதன் காரணமாகவே மற்ற அணிகளின் ரசிகர்கள் தோனி நம்மளுடைய அணிக்கு விளையாடினால் நன்றாக இருக்கும் என்று ஆசைப்படுவது உண்டு. அந்த வகையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தீவிர ரசிகர் ஒருவர் தோனியிடம் கேள்வி ஒன்றை கேட்டுள்ளார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சென்னை அணியின் கேப்டன் தோனி ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து வந்தார். அப்போது ஆர்சிபி ரசிகர் ஒருவர் ” நான் 16 வருடமாக ஆர்சிபி அணியின் தீவிர ரசிகன். நீங்கள் சென்னை அணிக்காக விளையாடி இதுவரை 5 முறை கோப்பையை வென்று கொடுத்து இருக்கிறீர்கள்.
நம்பர் 1 கிரீடத்தை இழந்த ரவி பிஷ்னோய், சுப்மான் கில். பாபர் அசாம் மீண்டும் முதலிடம்…!
எனவே எங்களுடைய அணிக்கும் வந்து எங்கள் அணிக்காக ஒரு கோப்பையை வென்று கொடுக்கவேண்டும் “என்று கூறினார். அந்த கேள்விக்கு பதில் அளித்த தோனி ” என்னை பொறுத்தவரை நான் சொல்லவது ஆர்சிபி அணி ஒரு நல்ல அணி என்பது அனைவர்க்கும் தெரியும். கிரிக்கெட் என்பதில் நாம் எப்பொழுதும் என்ன திட்டமிட்டமெல்லாம் செய்து இருக்கிறோமோ அதே அளவிற்கு எல்லாமே நடக்கும் என்பதை சொல்ல முடியாது.
ஐபிஎல் கிரிக்கெட்டை பற்றி பேசவேண்டும் என்றால் எல்லா அணிகளிலும் 10 வீரர்கள் அதாவது அந்த அணியினுடைய முக்கியமான வீரர்கள் இருந்தாலே அந்த அணி ஒரு நல்ல பலமான அணி என்று தான் கூறலாம். காயம் போன்ற பிரச்சனைகளால் அணியில் இருக்கும் வீரர்கள் விளையாட முடியாத சூழ்நிலைகள் உருவாகி கொள்கிறது. எனவே அணியில் இருக்கும் வீரர்கள் காயம் அடையாமல் இருந்தாலே அணி நன்றாக இருக்கும்.
என்னை பொறுத்தவரை பெங்களூர் அணி சிறந்த அணி தான். கண்டிப்பாக அந்த அணியும் கோப்பையை வெல்லவேண்டும். அந்த அணி மட்டுமில்லை எல்லா அணிகளும் கோப்பையை வெல்லவேண்டும் அது தான் என்னுடைய விருப்பம். நான் என்னுடைய அணியை விட்டு அந்த அணிக்கு வந்தால் எங்களுடைய ரசிகர்கள் அதனை எப்படி ஏற்றுகொள்வார்கள்? ‘எனவும் தோனி பதில் அளித்தார்.