லடாக்கில் இராணுவ வீரர்களுடன் சுதந்திர தினம் கொண்டாடிய தோனி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இரண்டு மாதத்திற்கு இராணுவ பயிற்சியில் ஈடுபட அவருக்கு அனுமதி கிடைத்ததால் தோனி பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டு பின் காஷ்மீரில் உள்ள விக்டர் படையுடன் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று 73-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.தோனி சுதந்திர தினத்தை லடாக்கில் உள்ள சக இராணுவ வீரர்களுடன் கொண்டாடினார்.மேலும் தோனி சத்பவனா இராணுவ பள்ளிக்கு சென்று மாணவர்களிடம் உரையாடினார்.
நேற்று தோனி ஜெனரல் மருத்துவமனைக்கு அங்கு சிகிக்சை பெற்று வரும் இராணுவ வீரர்களிடம் நலம் விசாரித்தார்.இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
லடாக்கில் இருந்து சியாச்சின் மலைக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.உலகின் மிக உயர்ந்த பனிமலையான அங்கு போர் பள்ளியை பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரோந்து பணியில் தோனி ஈடுபட்டு இருந்த போது ஆயுத பயிற்சி வழங்கப்பட்டதாகவும் , எதிரிகளை டார்கெட் செய்வது எப்படி என்ற விளக்கம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.