டி20 தொடரை தொடர்ந்து விஜய் ஹசாரே விளையாட உள்ள தவான்..!

Default Image

இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடக்க வீரராக விளையாடி வருபவர் தவான். இவருக்கு உலகக்கோப்பை போட்டியின் போது ஏற்பட்ட காயத்திற்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கலந்து கொண்டார்.ஆனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

தற்போது தென்ஆப்பிரிக்கா அணியிடம் டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறார். இன்று கடைசி போட்டி நடைபெற உள்ளது.இதைத் தொடர்ந்து தென்ஆப்பிரிக்கா அணியிடம் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர்.

இப்போட்டியில் தவான் விளையாடவில்லை என்பதால் நாளை முதல் நடைபெற உள்ள விஜய் ஹசாரே தொடரில் தவான் விளையாட முடிவு செய்துள்ளார்.இதுபற்றி தவான் கூறுகையில், நான் விஜய் ஹசாரே தொடரில் விளையாட உள்ளேன்.

டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்பதால் வீட்டில் இருப்பது , பயிற்சி மேற்கொள்வதை விட இப்போட்டிகளில் விளையாடுவது எனது திறமைக்கு சிறந்ததாக இருக்கும் என நினைக்கிறன் என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்