இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஓய்வோ அல்லது விளையாடுவதோ அந்த முடிவை தோனிதான் எடுக்க வேண்டும் தெரிவித்தார்.
இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் சமீபத்தில் நடைபெற்ற ஸ்டார் ஸ்போர்ட்க்கு பேட்டி ஒன்று அளித்த அவர் பல்வேறு விசயங்களை பகிர்ந்துகொண்டார். குறிப்பாக தோனியின் ஓய்வு பற்றியும் கூறினார். அதாவது, அது குறித்து பேசிய அவர், ஓய்வோ அல்லது விளையாடுவதோ அந்த முடிவை தோனிதான் எடுக்க வேண்டும் தெரிவித்தார். பின்னர் தேர்வு குழு உறுப்பினர் வேலைக்கு அப்பாற்பட்டு சொல்ல வேண்டும் என்றால் நான் மற்றவர்களைவிட தோனியின் தீவிர ரசிகன் என்றும், அவர் ஒரு கேப்டனாக அனைத்து சாதனைகளையும் செய்துவிட்டார்.
அதில் இரண்டு உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை, இந்தியாவை டெஸ்ட் பட்டியலில் முதல் இடத்துக்கு கொண்டு வந்தது, இதையெல்லாம் யாரும் கேள்வி கேட்க முடியாது என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பேசிய எம்.எஸ்.கே. பிரசாத், அவருடைய முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். தேர்வு குழுவராக நாங்கள் அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கி அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும். அதைத்தான் நாங்கள் இப்போது செய்து இருக்கிறோம் என குறிப்பிட்டார். தொடர்ந்து ரோஹித் சர்மா பற்றியும் பேசிய அவர், இப்போது டெஸ்ட், ஒரு நாள் தொடர் மற்றும் டி20 போட்டி என அனைத்து போட்டியிலும் அசத்தும் வீராக உருவாகியுள்ளார். இது எங்களுக்கே ஆசிரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என தெரிவித்தார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…