உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்னே தோனியின் ஓய்வு பற்றி விவாதங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. உலகக்கோப்பைக்கு பின்னர் 20 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதால் தோனிக்கு வாய்ப்பில்லை என பிசிசிஐ அதிகாரிகள் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து வெஸ்ட் இண்டிஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அப்போது ராணுவத்தில் இணைந்து பணியாற்ற போவதாக கூறி தோனி இரண்டு மாதங்கள் விடுப்பு அறிவித்தார்.பின்னர் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற டி-20 போட்டிகளில் தோனிக்கு வாய்ப்பு அளிக்கவில்லை.
அடுத்ததாக பங்களாதேஷ் அணி எதிரான தொடர் வரவுள்ளது. இந்நிலையில் தோனி தன்னுடைய விடுப்பை நவம்பர் மாதம் வரை நீட்டிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பங்களாதேஷ் அணியுடன் டி-20 போட்டிகளில் தோன விளையாட மாட்டார் எனவும் , டிசம்பர் மாதம் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் அணி உடனான தொடரில் தோனி விளையாட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…
சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…