டோக்கியோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் தீபிகா குமாரி காலிறுதிக்கு நுழைந்துள்ளார்.
இன்று டோக்கியோவில் ஒலிம்பிக் வில்வித்தை போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த தீபிகா குமாரி, பிரவீன் ஜாதவ், தருண் தீப் ராய், அதானு தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களில் ஆண்கள் பிரிவில் பிரவீன் ஜாதவ், தருண் தீப் ராய், அதானு தாஸ் ஆகியோர் பங்கு கொண்டு தோல்வியை அடைந்தனர்.
மேலும், தனிநபர் சுற்றில் தருண் தீப் ராய் காலிறுதிக்கு செல்லவில்லை. அதற்கு முந்தைய சுற்றிலேயே இவர் தோல்வியை அடைந்துள்ளார். பெண்கள் பிரிவில் பங்கு கொண்ட தீபிகா குமாரி வில்வித்தை போட்டியில் காலிறுதிக்கு நுழைந்துள்ளார். வில்வித்தை ரீகர்வ் முதல் சுற்றில் இவருடன் பூடான் வீராங்கனை கர்மா கலந்துகொண்டார். இவரை மிக எளிதாக 6-0 என்ற கணக்கில் வெற்றியடைந்துள்ளார்.
இரண்டாவது சுற்றில் அமெரிக்க வீராங்கனை ஜெனிபருடன் கலந்து கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 25-26, 28-25, 27-25, 24-25, 26-25 என்ற கணக்கில் வெற்றியடைந்தார். இந்திய வீராங்கனை தீபிகா குமாரி அமெரிக்க வீராங்கனை ஜெனிபரை 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்துள்ளார்.
சென்னை : காமெடி கலந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், சமீபத்தில்…
அமெரிக்கா : மாநிலத்திற்கு என்ன தான் ஆச்சு என்கிற வகையில், இந்த ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொழுந்துவிட்டு தீ ஒரு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த ஜனவரி 10ஆம் தேதியன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு முக்கிய சட்ட…
சென்னை : நேற்று (ஜனவரி 22 ) மாலை 5 மணியளவில் மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் மும்பை நோக்கி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் புதிய அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.…
மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நேற்று (ஜனவரி 22 ) மாலை 5 மணியளவில் மும்பை நோக்கி…