#BREAKING: ஆடவர் 86 கிலோ பிரிவில் தீபக் புனியா தங்கம் வென்றார்..
2022 ஆம் ஆண்டு பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய நட்சத்திர மல்யுத்த வீரர் தீபக் புனியா, ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல் 86 கிலோ பிரிவு இறுதிப் போட்டியில் பாகிஸ்தானின் முஹம்மது இனாமுடன் மோதி தங்கப் பதக்கத்தை வென்றார்.
இன்று நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு மல்யுத்த போட்டியில் பஜ்ரங் புனியா தொடர்ந்து இரண்டாவது தங்கம் வென்றுள்ளார். சாக்ஷி மாலிக் மற்றும் தீபக் புனியா ஆகியோர் தங்கம் வென்றதை தொடர்ந்து மல்யுத்தத்தில் இந்தியா மூன்று தங்கப் பதக்கங்களை வென்றது. அன்ஷு மாலிக் வெள்ளி பதக்கம் மற்றும் திவ்யா கக்ரான் வெண்கலம் வென்று இந்தியாவுக்கு ஐந்து மல்யுத்தப் பதக்கங்களை பெற்று தந்தனர்.