மல்யுத்த தரவரிசை பட்டியலில் தீபக் பூனியா முதலிடம்…!

சர்வதேச மல்யுத்த சம்மேளனம் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் உலக மல்யுத்தத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் தீபக் பூனியா, பிரீஸ்டைல் 86 கிலோ உடல் எடைப்பிரிவின் பட்டியலில் முதலிடத்திற்கு சென்று உள்ளார்.
மேலும் இந்த தொடரில் வெண்கலம் வென்ற இந்திய வீரர் பஜ்ரங் பூனியா 65 கிலோ எடைப்பிரிவில் முதலிடத்தைதவற விட்டு 2-வது இடத்திற்கு சென்று உள்ளார்.இந்த பிரிவின் உலக சாம்பியனான காட்ஸிமுராத் ரஷிடோவ் (ரஷியா) முதல் இடத்தை பெற்றுள்ளார்.