பகலிரவு டெஸ்ட்டை காண செல்லும் மோடி முதல் சச்சின் ,சானியா மிர்ஷா வரை
இந்தியா மற்றும் வங்கதேசம் விளையாடும் முதல் பகலிரவு டெஸ்ட் தொடர் கொல்கத்தாவில் வைத்து நடைபெறுகிறது.இது வரலாற்றில் முதல் முறையாக நடக்க இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரிடத்திலும் ஒரு எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது .இதற்காக பிரத்தியேகமாக பிங்க் நிறத்தில் பந்து பயன்படுத்தப்பட உள்ளது .
இந்த முதல் பகலிரவு ஆட்டத்தை காண பிரதமர் நரேந்திர மோடி ,வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா,மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜி , கவர்னர் ஜெகதீப் தன்கார் போன்றவர்களுக்கும் விளையாட்டு பிரபலங்களான சச்சின் ,சானியா மிர்ஷா மற்றும் விஸ்வநாத ஆனந்த் ஆகியோர்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.