மைதானத்தின் நடுவில் அழ ஆரம்பித்த டேவிட் வார்னர்?
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். சிட்னியில் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, டேவிட் வார்னர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு நடு மைதானத்தில் அழுது விட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக டேவிட் வார்னர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில், டேவிட் வார்னரின் பிரியாவிடை டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சிட்னியில் விளையாடிய டேவிட் வார்னரின் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானை 3-0 என ஒயிட்வாஷ் செய்துள்ளது. டேவிட் வார்னரை இனி ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் பார்க்க முடியாது.
சிட்னியில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்குப் பிறகு, வர்ணனையாளர்கள் டேவிட் வார்னரை நேர்காணலில் பேச அழைத்தபோது, அவர் ஏதாவது சொல்ல வந்தபோது, அவர் திடீரென்று உணர்ச்சிவசப்பட்டு மைதானத்தின் நடுவில் அழுது விட்டார். பின்னர் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்த டேவிட் வார்னர், திடீரென அங்கிருந்து திரும்பி சக வீரர்களிடம் சென்றார். இதைத்தொடர்ந்து, மைதானத்தில் தனது மனைவியைக் கட்டிப்பிடித்து டேவிட் வார்னர் உணர்ச்சிவசப்பட்டார் இது தொடர்பான பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.