சரித்திரம் படைத்த டேவிட் வார்னர்.. ஸ்டீவ் வாக் சாதனை முறியடிப்பு..!

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் வரலாற்று சாதனை படைத்துள்ளார். வார்னர் 38 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும், இந்த காலகட்டத்தில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் வரலாறு படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்காக அதிக ரன்கள் குவித்த இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையை டேவிட் வார்னர் பெற்றுள்ளார்.

இதன் மூலம் வார்னர் ஸ்டீவ் வாக் சாதனையை டேவிட் வார்னர்  முறியடித்தார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தனது சர்வதேச கிரிக்கெட்டில் 18,496 ரன்கள் எடுத்திருந்தார். அதே சமயம், தற்போது வார்னர் ஸ்டீவ் வாக்கை முந்தியுள்ளார். டேவிட் வார்னர் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் 18,502 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்காக அதிக ரன்கள் குவித்தவர்கள்  பட்டியலில் டேவிட் வார்னர்  இடம்பெற்றுள்ளார்.

முதல் இன்னிங்ஸில் 318 ரன்னிற்கு ஆல் அவுட் ஆன ஆஸ்திரேலியா ..!

சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்காக அதிக ரன்கள் குவித்தவர்கள்  பட்டியலில் முதலிடத்தில் ரிக்கி பாண்டிங் உள்ளர். சர்வதேச கிரிக்கெட்டில் பாண்டிங் மொத்தம் 27,368 ரன்கள் குவித்துள்ளார்.  இது தவிர, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்தவர் பற்றி பேசினால், சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். டெண்டுல்கர் 34, 357 ரன்கள் எடுத்துள்ளார். குமார் சங்கக்கார 28016 ரன்களுடன்  இரண்டாவது இடத்திலும், ரிக்கி பாண்டிங் 27483 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். விராட் கோலி 26532 ரன்களுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்