Dallas Open : காலிறுதிக்கு தகுதி பெற்றனர் டாமி பால் மற்றும் பென் ஷெல்டன்..!
டல்லாஸ் ஓபன் டென்னிஸ் தொடர், அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள டல்லாஸில் நடைப்பெற்று வருகிறது. ஆண்களுக்கான ஏடிபி இன்டோர் ஹார்ட் கோர்ட் போட்டியாக நடைபெறும். இந்த டல்லாஸ் ஓபன் தொடர் தெற்கு மெதடிஸ்ட் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஸ்டைஸ்லிங்கர்/ஆல்டெக் டென்னிஸ் வளாகத்தில் நடைப்பெற்று வருகிறது.
FIH Pro League: ஆஸ்திரேலியாவிடம் 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய மகளிர் அணி..!
இந்த தொடரில் நேற்று டாமி பால் மற்றும் டரோ டானியேலும் மோதினர். பின் பென் ஷெல்டனும், மைகேல் ம்மொஹ்வும் மோதி கொண்டனர். இதில் டாமி பால் மற்றும் பென் ஷெல்டன் அவர்கள் விளையாடிய போட்டியில் வெற்றி பெற்றனர்.
அமெரிக்கா வீரரான டாமி பால், ஜப்பானிய வீரரான டரோ டானியேலுடன் மோதிய போட்டியில் தன்னுடன் எதிர்த்து விளையாடிய ஜப்பானிய வீரரான டரோ டானியேலை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். அதன் பின் அமெரிக்கா வீரரான மைகேல் மொஹ்வும், அமெரிக்கா வீரரான பென் ஷெல்டனும் விளையாடிய போட்டியில் மைகேல் ம்மொஹ்வை 6-3, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.
இந்த வெற்றிகளின் மூலம் டாமி பாலும், பென் ஷெல்டனும் ரவுண்டு தகுதி சுற்றில் இருந்து கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். மேலும் சில போட்டிகளின் முடிவின் அடிப்படையில் இவ்விருவரும் காலிறுதியில் யாருடன் மோதுவர்கள் என்பது தெரிய வரும்.