இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலக கோப்பை தொடருக்கு பின்னர் எந்த விதமான தொடரிலும் கலந்துகொள்ளவில்லை.பின்னர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு அறிவிப்பார் என பலர் கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் தோனி ஓய்வு பற்றி எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி தற்போது பிசிசி தலைவராகத் தேர்வாகியுள்ளார்.இவர் வருகின்ற 24-ம் தேதி கங்குலி தேர்வுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.
இதை தொடர்ந்து கங்குலி கூறுகையில் , 24-ம் தேதி இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவை சந்திக்க உள்ளேன். அப்போது தோனியின் நிலை குறித்து அறிந்து பின்னர் தெரிவிப்பேன். மேலும் தோனியின் விருப்பத்தை அவரிடம் பேச உள்ளேன் என கூறினார்.
தேர்வுக்குவின் கூட்டம் 21-ம் தேதி நடைபெற இருந்தது.ஆனால் 23-ம் தேதி பிசிசிஐ தலைவராக கங்குலிபதவி ஏற்பதாக இருப்பதால் அந்த கூட்டம் 24-ம் தேதி மாற்றப்பட்டது. மேலும் சமூக வலைதளங்களில் இந்தியா , பங்களாதேஷ் இடையிலான டி20 தொடரில் தோனி பங்கேற்க வாய்ப்பு குறைவு என தகவல் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…