தலைவராக பதவியேற்ற உடனே தல தோனியை குறி வைக்கும் தாதா கங்குலி..!

Default Image

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலக கோப்பை தொடருக்கு பின்னர் எந்த விதமான தொடரிலும் கலந்துகொள்ளவில்லை.பின்னர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு அறிவிப்பார் என பலர் கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் தோனி ஓய்வு பற்றி எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி தற்போது பிசிசி தலைவராகத் தேர்வாகியுள்ளார்.இவர் வருகின்ற 24-ம் தேதி கங்குலி தேர்வுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.
இதை தொடர்ந்து கங்குலி கூறுகையில் , 24-ம் தேதி இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவை  சந்திக்க உள்ளேன். அப்போது தோனியின் நிலை குறித்து அறிந்து பின்னர் தெரிவிப்பேன். மேலும் தோனியின் விருப்பத்தை அவரிடம் பேச உள்ளேன் என கூறினார்.
தேர்வுக்குவின் கூட்டம் 21-ம் தேதி நடைபெற இருந்தது.ஆனால் 23-ம் தேதி பிசிசிஐ தலைவராக கங்குலிபதவி ஏற்பதாக இருப்பதால் அந்த கூட்டம் 24-ம் தேதி மாற்றப்பட்டது. மேலும் சமூக வலைதளங்களில் இந்தியா , பங்களாதேஷ் இடையிலான டி20 தொடரில் தோனி பங்கேற்க வாய்ப்பு குறைவு என தகவல் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்