#CWG2022: காமன்வெல்த் டேபில் டென்னிஸ்: இந்திய மகளிர் அணி வெற்றி!
டேபில் டென்னிஸ் போட்டியில் இந்திய மகளிர் அணிக்கு இரண்டாவது வெற்றி.
காமன்வெல்த் டேபில் டென்னிஸ் போட்டியில் இந்திய மகளிர் அணிக்கு இரண்டாவது வெற்றி கிடைத்துள்ளது. டேபில் டென்னிஸ் 2வது போட்டியில் கயானாவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்திய மகளிர் அணி. டேபிள் டென்னிஸ் மகளிர் அணி போட்டியில் இந்தியாவின் ‘தங்கப் பெண்’ மணிகா பத்ரா தனது கயானா எதிராளியை வசதியாக வீழ்த்தி, இந்தியா 2-0 என முன்னிலை பெற உதவினார். முதல் செட்டில் 11-1 என ஆதிக்கம் செலுத்திய அவர், இரண்டாவது செட்டில் அற்புதமாக முன்னிலை பெற்றார். இந்திய மகளின் அணியின் மணிகா பத்ரா 11-1, 11-3, 11-3 என்ற செட் கணக்கில் துரையா தாமஸை வீழ்த்தினார்.