தனுஷின் ரகிட ரகிட பாடலுக்கு சிஎஸ்கே வீரர்கள் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக மார்ச் – ஏப்ரல் – மே மாதங்களில் இந்தியாவில் நடைபெற வேண்டிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தடை செய்யப்பட்டது. அதனையடுத்து ஐபிஎல் நிர்வாகம் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்று அறிவித்திருந்தது. அதற்காக தயாராகி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், தற்போது தனுஷ் பாடலுக்கு நடனமாடியது போன்ற வீடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளனர்.
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்திலுள்ள ரகிட ரகிட என்ற பாடல் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களை வைத்து ரகிட ரகிட பாடல் பின்னணியில் மாஸ்ஸான வீடியோவை வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…