பரபரப்பு ..! கிரிக்கெட் வீரர் சவுமியா சர்கார் திருமணத்தில் ஏற்பட்ட திடீர் மோதல்..!

Default Image
  • வங்காளதேச அணியின் ஆல் ரவுண்டரான சவுமியா சர்காருக்கு கடந்த புதன் கிழமை திருமணம் நடைபெற்றது.
  • திருமண நிகழ்ச்சியின் போது திடீரென திருமணத்திற்கு வந்தவர்களின் சிலருடைய செல்போன்கள் திருடப்பட்டது.இதனால் மோதல் ஏற்பட்டது.

வங்காளதேச அணியின் ஆல் ரவுண்டரான சவுமியா சர்கார். வங்காள தேசத்திற்காக 15 டெஸ்ட், 55 ஒருநாள் மற்றும் 48 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ளார். மூன்று சர்வதேச சதங்களுடன் 3,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த புதன் கிழமை சவுமியா சர்கார்,  தீப்நாத் பூஜா (19) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.இவர்களின் திருமணம் அங்குள்ள குலான கிளப்பில் நடைபெற்றது. இவர்களின்  திருமண நிகழ்ச்சியின் போது திடீரென திருமணத்திற்கு வந்தவர்களின் சிலருடைய செல்போன்கள் திருடப்பட்டது.

சுமார் 7 செல்போன்கள் திருடப்பட்டுள்ளது. அதில் ஒன்று சவுமியா சர்க்கார் தந்தை செல்போன் என கூறப்படுகிறது.இதையெடுத்து திருமணத்தில் கலந்து கொண்ட சில நபர்களை சந்தேகத்தின் பேரில் பிடிபட உடனே அவர்கள் திருமணத்திற்கு வந்த உறவினர்களை தாக்கி உள்ளனர். இதனால் மோதல் ஏற்பட்டது.

பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதால் விரைந்து வந்த போலீசார் நிலைமையை சரிசெய்து  காணாமல் போன மொபைல் செல்போன்களை மீட்டு கொடுத்தனர்.அந்த சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டார்களா.. ? அல்லது இல்லையா? என்பது குறித்த விவரங்கள்  தெரியவில்லை.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay o panneerselvam
ops -sengottaiyen
udhayanidhi stalin and kamal haasan
Anil kumble - Rahul dravid - Virat kohli - Rajat Patidar
ben duckett Kevin Pietersen
Edappadi Palanisamy - RB Udhayakumar - Seengottaiyan