செல்ஃபிக்கு மறுத்ததால் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மற்றும் அவரது நண்பர்கள் மீது ஒரு கும்பல் காத்திருந்து தாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று , இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மற்றும் அவரது நண்பர்கள் மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட வந்துள்ளனர். அப்போது ஒரு பெண்ணும், ஆணும் பிரித்வி ஷாவிடம் செல்பி கேட்டுள்ளனர். அதனை அடுத்து செல்பி புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது.
பேஸ் பால் பேட் தாக்குதல் : இதனை அடுத்து மேலும் சில செல்பி புகைப்படங்களை எடுக்க அவர் கேட்டுள்ள பொது பிரித்வி ஷா மறுத்துள்ளார். அப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடித்து, அந்த செல்பி கேட்ட நபர் ஹோட்டலுக்கு கிழே காத்திருந்து பேஸ் பால் பேட் உள்ளிட்ட ஆயுதங்களோடு, ப்ரித்வி ஷா மற்றும் நண்பர்களை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
வழக்குப்பதிவு : இதனை அடுத்து அந்த கும்பல் பிரித்வி ஷாவின் காரையும் தாக்கியுள்ளார் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பிரித்வி ஷா நண்பர் கொடுத்த புகாரின் பெயரில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சமகுற்றம் சாட்டப்பட்ட சப்னா கில் தரப்பு இதனை முற்றிலும் மறுத்துள்ளது.
மறுப்பு : சப்னா கில்லின் வழக்கறிஞர் அலி காஷிப் கான் கூறுகையில், செல்பி எடுக்க வந்த அந்த பெண்ணை பிரித்வி ஷா தாக்கியதாக வும், கில்லின் தோழி படமெடுத்த வீடியோவில், உடைந்த பேஸ்பால் மட்டையை பிரித்வி ஷா பிடித்துக் கொண்டிருக்கும் படி உள்ளத்தையும் சுட்டி காட்டினார். மேலும், ‘ சப்னா கில் மருத்துவமனைக்கு கூட அழைத்துச்செல்லப்படாமல் ஓஷிவாரா காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார். தானே சப்னா கில் வழக்கறிஞர் குற்றம்சாட்டினார்.
டெல்லி: கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, இந்திய அணியின் வேகப்பந்து…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தந்தை பெரியார் குறித்து பல்வேறு…
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி வளர்ச்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.…
சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளதாக…
ஆந்திரப் பிரதேசம்: திருமலை திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தபோது, அங்கு சொர்க்கவாசல் திறப்பிற்காக வழங்கப்பட்ட இலவச தரிசனத்திற்கான…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பெரியார் குறித்து பேசிய…