#U19WC2024 : நமீபியாவை வென்று அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைத்தது ஜிம்பாப்வே அணி..!

தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் U19 கிரிக்கெட் உலகக்கோப்பையின் 20 வது போட்டியானது இன்று நடைப்பெற்றது. அதில், ஜிம்பாப்வே அணியும் , நமீபியா அணியும் மோதியது. அதில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்து வீச்சை தேர்வு செய்தனர். இதனால் நமீபியா அணி பேட்டிங் செய்ய  களமிறங்கியது.

#U19WC2024 : ஸ்காட்லாந்து அணியை தோற்கடித்து தென்ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி..!

நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்த முடியமால் வழக்கம் போல் இந்த போட்டியிலும் விளையாடினர். தொடக்க வீரர்கள் சரியாக விளையாடாத காரணத்தால் ரன்கள் எடுக்க மிகவும் திணறியது. பின் களமிறங்கிய எந்த ஒரு வீரரும் நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

இறுதியில் அந்த அணி 8 விக்கெட்டை இழந்து 50 ஓவரில் வெறும் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிக பட்சமாக ஹன்ரோ பேடன்ஹார்ஸ்ட் 39 ரன்கள் மட்டும் எடுத்திருந்தார். ஜிம்பாப்வே தரப்பில் நியூமன் நியாம்ஹுரி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதை தொடர்ந்து 147 என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது ஜிம்பாப்வே அணி.

தொடக்கத்தில் 21 ரன்களில்  1 விக்கெட்டை இழந்த ஜிம்பாப்வே அணி. அதன் பின்பு நிதானமாக விளையாடி விக்கெட்டை எளிதில் கொடுக்காமல் பின் 122 ரன் இருக்கும் பொழுது தான் இரண்டாவது விக்கெட்டை பறிக்கொடுத்தது.

ஜிம்பாப்வே அணியின் வீரரான பனஷே தருவீங்க மிகவும் நிதானமாக விளையாடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 59* ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். இதனால் ஜிம்பாப்வே அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் அடுத்த சுற்றுக்கும் தங்களை தக்க வைத்து கொண்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்