Cricket Breaking: கடைசி ஓவரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற ஜிம்பாவே
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது.பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாவே அணிகளுக்கு இடையேயான போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற ஜிம்பாவே அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்களை எடுத்தது. ஜிம்பாவே அணியில் சேன் வில்லியம்ஸ் மட்டும் அதிகபட்சமாக 31 ரன்களை எடுத்தார்.
பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களில் முகமது வாசிம் 4 விக்கெட்களையும்,ஷதா கான் 3 விக்கெட்டையும் ,ஹரிஸ் ரவூப் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து சுலபமான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஆரம்பமே தடுமாற்றத்தை சந்தித்தது கேப்டன் பாபர் அசாம் 4 ரன்னுக்கு விக்கெட்டை இழந்தார்.ஷான் மசோத் அதிரடியாக விளையாடி 44 ரன்களை அதிகபட்சமாக எடுத்திருந்தார்.
வெற்றி வாய்ப்பு யாருக்கு என்ற பதற்றம் கடைசி ஓவர் வரை இருந்தது.6 பந்துக்கு 11 ரன்கள் எடுத்தால் பாகிஸ்தான் வெற்றி என்று இருந்த நிலையில் திடீர் திருப்பமாக கடைசி ஓவர் 3,4,1,0,W,W1 என்று பாகிஸ்தானுக்கு எதிராக அமைய 8 விக்கெட்களை இழந்தது 129 ரன்களை எடுக்க 1 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஜிம்பாவே திரில் வெற்றி பெற்றது.