ஆப்கானிஸ்தான் – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி-20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஜிம்பாப்வேவை ஒயிட் வாஷ் செய்தது ஆப்கானிஸ்தான்.
ஆப்கானிஸ்தான் – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று டி-20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. முதலில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்ற நிலையில், முதல் டெஸ்டில் ஜிம்பாப்வே அணியும், 2-வது டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று, தொடர்ந் சமனில் முடிந்தது.
இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான டி-20 போட்டி நடைபெற்றது. இதில் இரண்டு போட்டிகளில் அப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்ற நிலையில், மூன்றாம் மற்றும் இறுதி டி-20 போட்டி, அபுதாபியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் அடித்தது.
184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே நிதானமாக ஆடிவந்த ஜிம்பாப்வே அணி, இறுதியாக 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து, தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் தொடரை ஆப்கானிஸ்தான் அணி, 3-0 என்ற கணக்கில் ஜிம்பாப்வேவை ஒயிட் வாஷ் செய்தது ஆப்கானிஸ்தான்.
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…
சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…