ஜிம்பாப்வே vs ஆப்கானிஸ்தான் டி 20 : இன்று முதல் போட்டி….வெற்றிபெறப்போவது யார்?
ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
ஜிம்பாப்வே: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த போட்டிகள் இன்று முதல் டி20 போட்டியுடன் தொடங்கி அடுத்த வருடம் (அதாவது) ஜனவரி 6-ம் தேதி வரையில் டெஸ்ட் தொடருடன் நிறைவு பெறுகிறது.
இன்று (டிசம்பர் 11) முதல் டிசம்பர் 14ம் தேதி வரை மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. இன்று நடைபெறும் முதல் டி20 போட்டியனாது ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று (டிசம்பர் 11) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த டி20 போட்டிகள் நிறைவடைந்த பின்னர், இரு அணிகளும் டிசம்பர் 14-ம் தேதி முதல் டிச.21-ம் தேதி வரை மூன்று ஒருநாள் போட்டிகளிலும், டிசம்பர் 26-ம் தேதி முதல் ஜன்.6-ம் தேதி வரை இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடுகிறது.
டி20 மற்றும் ஒரு நாள் தொடர்கள் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறும். மேலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில், இன்று மாலை நடைபெறவிருக்கும் இந்த போட்டியில் விளையாட இன்று இரண்டு அணிகளும் பயிற்சியை மேற்கொண்டது. எனவே, போட்டி பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் என்பதால் எந்த அணி வெற்றிபெறப்போகிறது என்பதற்கான எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. எந்த அணி வெற்றிபெறப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.