ரசிகர்களுக்கு ஷாக்..! இந்திய அணியை வீழ்த்தி 1-0 என முன்னிலை பெற்றது ஜிம்பாப்வே ..!

ZIMvIND : தற்போது நிறைவு பெற்ற இந்திய-ஜிம்பாவே அணி இடையேயான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இன்று தொடங்கிய இந்த முதல் டி20 போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி வந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி ஜிம்மபவே அணி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கியது. தொடக்கத்தில் சற்று நிதானமாக விளையாடினாலும், ஜிம்பாப்வே அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் பறிகொடுத்து கொண்டே இருந்தது.
முக்கியமாக இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளரான ரவி பிஷ்னோயின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஜிம்பாப்வே அணியின் முக்கிய வீரர்கள் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். மேலும், போட்டியின் முதல் பாதையின் இறுதி நேரத்தில் நிதானமாக நின்று அணிக்கு ரன் சேர்த்தார் ஜிம்பாப்வே அணியின் விக்கெட் கீப்பரான கிளைவ் மடாண்டே. அவர் 25 பந்துக்கு 29 ரன்கள் எடுத்திருந்தார்.
இதனால் ஜிம்பாப்வே அணி 20 ஓவருக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் ரவி பிஷ்னோய் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதன் பிறகு எளிய இலக்கான 116 என்ற ரன்களை எடுக்க களம் இறங்கியது இந்திய அணி.
தொடக்கத்திலிருதே, இந்திய அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாகவே விளையாடி வந்தனர். ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து மிக மோசமாக தடுமாறியது. அதில் அபிஷேக் ஷர்மா ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து ருதுராஜ் கெய்க்வாட், ரியான் பராக், ரின்கு சிங், துருவ் ஜூரல் என அதிரடி வீரர்கள் அனைவரும் விக்கெட்டை இழந்தார்கள்.
இதன் காரணமாக 43-5 என தடுமாறியது, ஒரு முனையில் கில் மட்டும் நின்று அவரது விக்கெட்டை பறிகொடுக்காமல் விளையாடினார். ஆனால் துரதிஷ்டவசமாக கில்லும் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் இந்திய அணி மேலும் இக்கட்டான நிலையை சந்தித்தது.
அதன் பிறகு கில்லை போல ஒரு பக்கம் வாஷிங்டன் சுந்தர் நிலைத்து ஆட தொடங்கினார். ஆனால் மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தது. அதை தொடர்ந்து 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணி இறுதியில் 20 ஓவருக்கு 102 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதனால், 13 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி அபார வெற்றியை பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் 1-0 என முன்னிலையில் ஜிம்பாப்வே அணி முன்னிலையில் இருந்து வருகின்றனர்.