Rishabh Pant : ரிஷப் பண்ட் சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தற்போது பழைய பார்முக்கு திரும்பி வருகிறார். கார் விபத்தில் சிக்கி இருந்த அவர் சில மாதங்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த நிலையில், நீண்ட மாதங்களுக்கு பிறகு ஐபிஎல் போட்டிகளில் மூலம் ரீ-எண்டரி கொடுத்துள்ளார். இந்த சீசன் ஐபிஎல் தொடரில் இதுவரை 210 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்த சீசனில் இதுவரை அவர் நல்ல பார்மில் இருக்கிறார். இருந்தாலும், ரிஷப் பண்ட் வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு வருவாரா என்ற கேள்வி இன்னும் எழுந்து கொண்டே தான் இருக்கிறது. ரசிகர்கள் பலரும் வரவிருக்கும் மெகா டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் கீப்பர்-பேட்டராக அவர் இடம்பெற வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், ரிஷப் பண்ட் உடைய சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ரிஷப் பண்ட் உடைய பார்ம் இப்போது தான் முன்னேறி வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்த வாய்ப்பைப் இப்போது சரியாக பயன்படுத்தி வருகிறார். ஒரு கேப்டனாகவும் நன்றாக விளையாடி வருகிறார்.
அதைப்போல ரிஷப் பண்ட் கீப்பிங் செய்யும் போது அதனை பார்க்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஐபிஎல் தொடருக்கு முன்பு இவ்வளவு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு வாய்ப்பு கிடைத்த போது எப்படி பழைய மாதிரி விளையாடுவார் அதற்கு கொஞ்சம் சிரமம் படுவார் என்று நினைத்தேன். ஆனால் கடைசி 6-7 போட்டிகளில் அவரது முன்னேற்றம், அவரது தலைமை, திறமை மற்றும் விக்கெட் கீப்பிங் அனைத்தும் அருமை” என்றும் ஜியோ சினிமாவில் ஜாகீர் கான் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…