ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Zaheer Khan Rishabh Pant

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தற்போது பழைய பார்முக்கு திரும்பி வருகிறார். கார் விபத்தில் சிக்கி இருந்த அவர் சில மாதங்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த நிலையில், நீண்ட மாதங்களுக்கு பிறகு ஐபிஎல் போட்டிகளில் மூலம் ரீ-எண்டரி கொடுத்துள்ளார்.  இந்த சீசன் ஐபிஎல் தொடரில் இதுவரை 210 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்த சீசனில் இதுவரை அவர் நல்ல பார்மில் இருக்கிறார். இருந்தாலும், ரிஷப் பண்ட்  வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு வருவாரா என்ற கேள்வி இன்னும் எழுந்து கொண்டே தான் இருக்கிறது. ரசிகர்கள் பலரும்  வரவிருக்கும் மெகா டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் கீப்பர்-பேட்டராக அவர் இடம்பெற வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில், ரிஷப் பண்ட் உடைய சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ரிஷப் பண்ட்  உடைய பார்ம் இப்போது தான் முன்னேறி வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்த வாய்ப்பைப் இப்போது சரியாக பயன்படுத்தி வருகிறார். ஒரு கேப்டனாகவும் நன்றாக விளையாடி வருகிறார்.

அதைப்போல ரிஷப் பண்ட் கீப்பிங் செய்யும் போது அதனை பார்க்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஐபிஎல் தொடருக்கு முன்பு இவ்வளவு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு வாய்ப்பு கிடைத்த போது எப்படி பழைய மாதிரி விளையாடுவார் அதற்கு கொஞ்சம் சிரமம் படுவார் என்று நினைத்தேன். ஆனால் கடைசி 6-7 போட்டிகளில் அவரது முன்னேற்றம், அவரது தலைமை, திறமை மற்றும் விக்கெட் கீப்பிங் அனைத்தும் அருமை” என்றும் ஜியோ சினிமாவில் ஜாகீர் கான் பேட்டி அளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

donald trump tariffs
Nithyananda
narendra modi donald trump
siraj
rain tn
Waqf Amendment Bill 2025
RCB vs GT