‘படமாகிறது யுவராஜ் சிங்கின் வாழ்க்கை’! “அனிமல்” பட தயாரிப்பாளரின் அடுத்த படைப்பு!

Yuvraj Singh Bio Pic

சென்னை : இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாற்றை பயோ பிக்காக எடுக்கப் போவதாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் ..!

இந்திய அணியில் சிறிய வயதிலே அதாவது சச்சினுக்கு அடுத்த படியாக இடம்பெற்ற ஒரு முக்கிய வீரர் யுவராஜ் சிங் ஆவார். இந்திய அணியின் முன்னாள் வீரரும், மிகச் சிறந்த ஆல்ரவுண்டருமான யுவராஜ் சிங் சர்வேதச போட்டிகளில் இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்தவர். குறிப்பாகச் சொல்லப் போனால் 2007ம் ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பை மற்றும் 2011 ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் ‘சிறந்த தொடர் நாயகன்’ விருதையும் வென்று அசத்தியவர். அந்த அளவிற்கு அவரது பங்கை இந்திய அணிக்குக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யுவராஜ் சிங்கின் சவால்கள்..!

அதன் பிறகு புற்று நோய் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று மீண்டு வந்தார். இது போலத் தனது கிரிக்கெட் வாழ்விலும் பல சவால்களை எதிர்கொண்ட யுவராஜ் சிங், அதிலிருந்து பல முறை மீண்டும் வந்துள்ளார். குறிப்பிட்டுச் சொன்னால் 2007 ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பைக்கு முன் பிசிசிஐ அறிவித்திருந்த இளம் இந்திய அணியை ஒருவர் கூட வெற்றி பெறுவார்கள் என்று நம்பிக்கை இல்லாமலே இருந்தது. அதிலும் யுவராஜ் சிங்கின் பெயர் அப்போது மிகவும் அடிபட்டது.

அதிலிருந்து மீண்டு வந்து அதே தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒரு போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை படைத்தார். இது போலப் பல சவால்களைச் சந்தித்த அவர் இறுதியாக 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் தேதி அனைத்து வித கிரிக்கெட் தொடரிலிருந்தும் ஓய்வை அறிவித்தார்.

உருவாகும் யுவராஜ் சிங் ‘பயோபிக்’ ..!

இதற்கு முன் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ‘தோனி’யின் வாழ்க்கையை அடிப்படையாய் வைத்து உருவான படம் தான் ‘எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட ஸ்டோரி’. அந்த படம் திரையரங்கில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. அதற்கு அடுத்து கிரிக்கெட்டின் கடவுளாகக் கருதப்படும் சச்சின் டெண்டுல்கரின் ‘டாக்குமெண்ட்ரி’ வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

தற்போது அதனைத் தொடர்ந்து யுவராஜ் சிங்கின் பயோ பிக் திரைப்படமாக வெளியாக இருக்கிறது. ஹிந்தி மொழியில் உருவான படங்களான அனிமல், ஸ்ரீகாந்த், த்ரிஷ்யம் 2, கபீர் சிங் போன்ற திரைப்படங்களைத் தயாரித்த டி – சீரீஸ் உரிமையாளர் பூஷன் குமார் இந்த திரைப்படத்தைத் தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் யுவராஜ் சிங் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற தகவல் இது வரை வெளியாகவில்லை.

யுவராஜ் சிங் மகிழ்ச்சி ..!

தனது பயோ பிக் குறித்த திரைப்படம் எடுக்கப்போவதில் யுவராஜ் சிங் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். இதற்கு முன் தனது பயோ பிக் குறித்துப் பேசிய யுவராஜ் சிங், அதில் எனது கதாபாத்திரமாக சித்தாந்த் சதுர்வேதி நடிக்க வேண்டுமென தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் தன்னுடைய பயோபிக் குறித்து யுவராஜ் சிங் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

மேலும் , தன்னுடைய பயோபிக் திரைப்படம் யாருக்காவது உத்வேகத்தைக் கொடுத்தால் அது தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று அவர் கூறி உள்ளார். தோனிக்கு அடுத்த படியாக ஒரு ஆல் ரவுண்டராக, இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட இவரது திரைப்படமும் ரசிகர்களைக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi