எனக்காக யுவராஜ் சிங் வெயிலில் நின்றார்! ரமன்தீப் சிங் எமோஷனல்!
என்னைபோல இளம் வீரர்களுக்கு யுவராஜ் சிங் போன்ற பெரிய வீரர்களிடம் இருந்து பாராட்டு கிடைப்பது பெரிய விஷயம் என கொல்கத்தா வீரர் ரமன்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா : நைட் ரைடர்ஸ் (KKR) அணியைச் சேர்ந்த இளம் ஆல்-ரவுண்டர் ரமன்தீப் சிங். இவரை இந்த ஆண்டு கொல்கத்தா அணி 3 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்திருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர் கொல்கத்தா அணிக்காக தற்போது விளையாடி வரும் நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது தன்னுடைய கிரிக்கெட் பயணத்தில் மறக்க முடியாத ஒரு அனுபவத்தைப் பற்றி பகிர்ந்து கொணடார்.
அந்த அனுபவம் அவருக்கு எப்படி வந்தது என்றால், இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், இரண்டு முறை உலகக் கோப்பையை வெல்வதற்கு காரணமாக இருந்த யுவராஜ் சிங் பற்றி தான். யுவராஜ் சிங் கிரிக்கெட்டை தாண்டி சில வீரர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொடுத்து வருவது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ரமன்தீப் சிங்கிற்கு கொரோனா காலகட்டத்தில் பல உதவிகளை செய்துள்ள தகவலை தான் ரமன்தீப் சிங்கே தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர் ” கொரோனா சமயத்தில் பஞ்சாபில் உள்ள PCA (பஞ்சாப் கிரிக்கெட் சங்கம்) மைதானத்தில் ஒரு பயிற்சி அமர்வு நடந்தது. அப்போது யுவராஜ் சிங் எனக்கு உதவி செய்தார். எனக்காக அவருடைய பயிற்சியைத் தவிர்த்துவிட்டார்.பொதுவாக, ஒரு பெரிய வீரர் தனது பயிற்சியை முன்னுரிமையாகக் கொடுப்பார். ஆனால், யுவராஜ் அப்படி செய்யவில்லை. எனக்காக (center wicket) ஏற்பாடு செய்து, மதியம் முழுவதும் வெயிலில் நின்று, நான் எப்படி பேட்டிங் செய்கிறேன் என்பதை வீடியோ எடுத்தார்.
பதிவு செய்த அந்த வீடியோவை என்னிடம் காட்டி நீ எப்படி விளையாடுகிறாய் என்று பார் என்று சொன்னார். அதுமட்டுமின்றி உனக்கு இந்த மாதிரியான ஆட்டங்கள் சிறப்பாக வருகிறது தொடர்ச்சியாகவே இதனை ட்ரை செய்து விளையாடு…இது உனக்கு வரவில்லை எனவே திரும்பி இதனை முயற்சி செய்யாத எனவும் சில அறிவுரைகளை எனக்கு வழங்கினார். என்னைபோல இளம் வீரர்களுக்கு அவரை போன்ற பெரிய வீரர்களிடம் இருந்து இது போன்ற வார்த்தைகள் கிடைப்பது பெரிய விஷயம்.
எனக்கு அது போன்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது என்பதை வாழ்நாள் முழுவதும் மறக்கவே மாட்டேன். நான் யுவராஜ் சிங்கிற்கு என்றென்றும் நன்றி செலுத்த வேண்டியவன்” எனவும் ரமன்தீப் சிங் தெரிவித்துள்ளார். யுவராஜ் இப்படி ராமன்தீப் ஒருவருக்கு மட்டும் உதவவில்லை. பஞ்சாபைச் சேர்ந்த மற்ற இளம் வீரர்களான சுப்மன் கில், அபிஷேக் ஷர்மா, அன்மோல்ப்ரீத் சிங், பிரப்ஸிம்ரன் சிங் போன்றவர்களுக்கும் உதவி செய்திருக்கிறார்.
உதவி என்றால் பண ரீதியதாக இல்லை தன்னுடைய அனுபவத்தை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்தால் அவர்களாலும் புரிந்து கொண்டு சிறப்பாக விளையாடுவார்கள் என்ற நோக்கத்தில் தான் அடிக்கடி சுப்மன் கில், அபிஷேக் ஷர்மா, அன்மோல்ப்ரீத் சிங் ஆகியோருக்கு கால் செய்து அவர்களை பாராட்டுவதும் தேவையான அறிவுரைகளையும் வழங்கி கொண்டு உதவி செய்து வருகிறார்.