யுவராஜ் சிங், கோலி சாதனை பட்டியலில் இடம்பிடித்த சிவம் துபே..!

Published by
murugan

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணிக்காக ஆல்ரவுண்டர் சிவம் துபே சிறப்பாக செயல்பட்டார். நேற்று முன்தினம் மொஹாலியில் உள்ள டி20 தொடரின் முதல் போட்டி ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், 4-வது இடத்தில் பேட்டிங் செய்த சிவம் துபே 40 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசி ஆட்டமிழக்காமல் 60 ரன்கள் எடுத்தார்.

முதல் டி20-யில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துபே ஆட்ட நாயகன் ஆனார். மேலும், துபே இந்த போட்டியில்  2 ஓவரில் 9 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். இந்நிலையில், ஒரே சர்வதேச டி20 போட்டியில் சிவம் துபே ஒரு அரை சதம் மற்றும் 1 விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரின் சாதனை பட்டியலில்  இணைந்துள்ளார்.

நான் திரும்பி வந்துட்டேனு சொல்லு! டி20-யில் களமிறங்கும் கிங் கோலி!

கோலி, யுவராஜ் சிங் , ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா , அக்சர் படேல் மற்றும்  வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்குப் பிறகு ஒரே போட்டியில் அரைசதம் அடித்து விக்கெட்டை வீழ்த்திய 7-வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை சிவம் துபே பெற்றார். இந்த பட்டியலில் யுவராஜ்  3 முறையும், விராட் கோலி 2 முறையும் மற்ற வீரர்கள் தலா ஒரு முறை இந்த சாதனையை படைத்துள்ளனர்.

டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாளை இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் 2-வது போட்டி நடைபெற்றவுள்ளது.

Recent Posts

LSGvsGT : டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சு தேர்வு! மிட்செல் மார்ஷ்க்கு பதில் இவர் தான்!

லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது.  போட்டியில்…

17 minutes ago

‘இதெல்லாம் நமக்கு தேவையா குமாரு’.., சூட்கேஸ் உள்ளே காதலி.! வசமாக சிக்கிக்கொண்ட மாணவன்.!

சோனிபத் : ஹரியானாவின் சோனிபத்தில் உள்ள ஓபி ஜிண்டால் குளோபல் என்கிற பல்கலைக்கழகத்தில் ஒரு பெண்ணை  ஆண்கள் விடுதிக்குள் சூட்கேஸில்…

57 minutes ago

“அதிமுக – பாஜக கூட்டணி குறித்து கருத்து இல்லை” – பிரேமலதா விஜயகாந்த்.!

சென்னை : இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்றைய தினம் அதிமுக -…

1 hour ago

பாஜக – அதிமுக கூட்டணி: ”விரட்டியடித்து தூக்கி எறியப் போவது உறுதி”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…

2 hours ago

“இது மணிப்பூர் அல்ல… தமிழ்நாடு”- அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.!

சென்னை : அதிமுக - பாஜக கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி. தொடர் தோல்வியை அந்த அணிக்குக் கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு…

3 hours ago

“2 ரெய்டுகளுக்கு அதிமுக அடமானம்” – அதிமுக, பாஜக கூட்டணி குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம்.!

சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியே ஊழல் தான் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிகார வெறியோடு அமைக்கப்பட்டுள்ள இந்த…

3 hours ago