அந்த 6 சிக்சரில் எனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துவிட்டாயே – யுவராஜ்சிங் முக்கிய தகவல்

Published by
Castro Murugan

கொரோனா பிடியிலிருந்து தப்பிக்க இந்தியா கடுமையாக போராடி வருகிறது .இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் ஊரடங்கில் சமுக வலைதளத்தில் நேரத்தை செலவிட்டு வருகிறார்.அவர்  2007 ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ஒரே ஓவரில் அடித்த 6 சிக்சர்களை பற்றி பகிர்ந்துள்ளார் .

அவர்  2007 ஆம் ஆண்டு நடைபெற்ற  20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்  போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஸ்டூவர்ட் பிராட்டின் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்ததையும் ஸ்டூவர்ட்டின் தந்தை அதன் பிறகு கூறியதையும் பற்றி சுவாரஸ்யங்களை  பகிர்ந்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பிளின்டாப் என்னை சீண்டினார் இதனால் கடும் கோபத்தில் இருந்த நான் ஸ்டூவர்ட் பிராட்டின் பந்தை ஒரு பதம் பார்த்துவிட்டேன் .எனக்கு அந்த 6 சிக்சர்களை அடித்த பின்பு மிகுந்த மகிழ்ச்சி காரணம் என்னவென்றால் அதற்கு முந்தைய சில வாரங்களுக்கு முன்னால்தான் இங்கிலாந்து வீரர் மாஸ்கரனாஸ் ஒருநாள் போட்டியில் எனது ஓவரில்  5 சிக்சர்களை அடித்திருந்தார் .சிக்சர்களை அடித்த பின்பு பின்பு பிளின்டாப்பை பார்த்தேன் பின்பு  மாஸ்கரனாஸ் பார்த்தேன் அவர் சிரித்தார் .

பின்பு இரண்டு நாட்களுக்கு பிறகு ஸ்டூவர்ட் பிராட்டின் தந்தை கிறிஸ் பிராட் என்னை வந்து சந்தித்தார் . ஆவர் இத்தொடரின் நடுவரில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது . அவர் என்னிடம் வந்து நீ என்னுடைய மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துவிட்டாய்.இப்பொழுது அவனுக்கு நீ கையெழுத்திட்டு ஒரு பனியனை தருவாயா?’ என்று கேட்டார்.

நான் இந்திய கிரிக்கெட் அணியின் பனியனில் சில வாசகங்களை எழுதினேன் அது என்னவென்றால் எனது பந்து வீச்சில் ஒரே ஓவரில் 5  சிக்சர்கள் அடிக்கப்பட்டிருக்கிறது, அதன் வேதனையை நான் அறிவேன் .இங்கிலாந்து கிரிக்கெட் வாழ்க்கையில் சிறப்பான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள் என்று எழுதினேன் .

இன்று ஸ்டூவர்ட் பிராட் உலகின் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக  திகழ்கிறார்.இந்திய வீரர்களின் பந்து வீச்சில் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடிக்கப்படக்கூடும் என்று நான் நினைக்கவில்லை என்று யுவராஜ்சிங் கூறினார் .அவர் ஊரடங்கில் இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் சமூகவலைதளங்களில் நேரலையில் கேள்விகள் கேட்டு தனது நேரத்தை செலவழித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

Published by
Castro Murugan

Recent Posts

மேட்ச் ஓவர்! சென்னையில் வைத்தே சம்பவம் செய்த கொல்கத்தா…8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

மேட்ச் ஓவர்! சென்னையில் வைத்தே சம்பவம் செய்த கொல்கத்தா…8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

8 hours ago

தோனி அவுட்டா இல்லையா? அம்பயர் முடிவால் அப்செட்டான சென்னை ரசிகர்கள்!

சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…

8 hours ago

முதல் பேட்டிங்கிலும் சொதப்பிய சென்னை…கொல்கத்தாவுக்கு வைத்த சின்ன இலக்கு!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…

9 hours ago

எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம்…எம்பி கனிமொழி காட்டம்!

சென்னை :  2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…

10 hours ago

டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு! சென்னையில் ருதுராஜ் பதில் யார்?

சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…

11 hours ago

பாஜக மாநிலத் தலைவர் தேர்தல் : நயினார் நாகேந்திரனுக்கு போட்டியாக ஒருவர் வேட்புமனு?

சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…

12 hours ago