அந்த 6 சிக்சரில் எனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துவிட்டாயே – யுவராஜ்சிங் முக்கிய தகவல்

கொரோனா பிடியிலிருந்து தப்பிக்க இந்தியா கடுமையாக போராடி வருகிறது .இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் ஊரடங்கில் சமுக வலைதளத்தில் நேரத்தை செலவிட்டு வருகிறார்.அவர் 2007 ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ஒரே ஓவரில் அடித்த 6 சிக்சர்களை பற்றி பகிர்ந்துள்ளார் .
அவர் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஸ்டூவர்ட் பிராட்டின் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்ததையும் ஸ்டூவர்ட்டின் தந்தை அதன் பிறகு கூறியதையும் பற்றி சுவாரஸ்யங்களை பகிர்ந்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பிளின்டாப் என்னை சீண்டினார் இதனால் கடும் கோபத்தில் இருந்த நான் ஸ்டூவர்ட் பிராட்டின் பந்தை ஒரு பதம் பார்த்துவிட்டேன் .எனக்கு அந்த 6 சிக்சர்களை அடித்த பின்பு மிகுந்த மகிழ்ச்சி காரணம் என்னவென்றால் அதற்கு முந்தைய சில வாரங்களுக்கு முன்னால்தான் இங்கிலாந்து வீரர் மாஸ்கரனாஸ் ஒருநாள் போட்டியில் எனது ஓவரில் 5 சிக்சர்களை அடித்திருந்தார் .சிக்சர்களை அடித்த பின்பு பின்பு பிளின்டாப்பை பார்த்தேன் பின்பு மாஸ்கரனாஸ் பார்த்தேன் அவர் சிரித்தார் .
பின்பு இரண்டு நாட்களுக்கு பிறகு ஸ்டூவர்ட் பிராட்டின் தந்தை கிறிஸ் பிராட் என்னை வந்து சந்தித்தார் . ஆவர் இத்தொடரின் நடுவரில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது . அவர் என்னிடம் வந்து நீ என்னுடைய மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துவிட்டாய்.இப்பொழுது அவனுக்கு நீ கையெழுத்திட்டு ஒரு பனியனை தருவாயா?’ என்று கேட்டார்.
நான் இந்திய கிரிக்கெட் அணியின் பனியனில் சில வாசகங்களை எழுதினேன் அது என்னவென்றால் எனது பந்து வீச்சில் ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் அடிக்கப்பட்டிருக்கிறது, அதன் வேதனையை நான் அறிவேன் .இங்கிலாந்து கிரிக்கெட் வாழ்க்கையில் சிறப்பான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள் என்று எழுதினேன் .
இன்று ஸ்டூவர்ட் பிராட் உலகின் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்கிறார்.இந்திய வீரர்களின் பந்து வீச்சில் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடிக்கப்படக்கூடும் என்று நான் நினைக்கவில்லை என்று யுவராஜ்சிங் கூறினார் .அவர் ஊரடங்கில் இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் சமூகவலைதளங்களில் நேரலையில் கேள்விகள் கேட்டு தனது நேரத்தை செலவழித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .