Abhishek Sharma : உலக கோப்பைக்கு அபிஷேக் சர்மா சரிப்பட்டு வரமாட்டார் என யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக் சர்மா அதிரடியான ஃபார்மில் விளையாடி வருகிறார். இந்த சீசனில் மட்டும் இதுவரை 8 போட்டிகள் விளையாடி 288 ரன்கள் எடுத்து இருக்கிறார். சிக்ஸர்கள் மட்டும் இந்த சீசனில் இதுவரை 26 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இவருடைய பார்ம் நன்றாக இருப்பதன் காரணமாக இவர் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என ரசிகர்கள் அனைவரும் கூறி கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட போது அபிஷேக் சர்மா வரும் உலகக்கோப்பை போட்டியில் விளையாடுவது சரியானதாக இருக்காது இன்னும் 6 மாதங்களுக்கு பிறகு வரும் போட்டிகளில் இந்திய அணியில் அவர் விளையாடினாள் சரியாக இருக்கும் என்று பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய யுவராஜ் சிங் ” அபிஷேக் சர்மா நன்றாக விளையாடுகிறார். கிட்டத்தட்ட இந்திய அணிக்காக விளையாடும் அளவிற்கு வந்துவிட்டார். ஆனால், நான் என்னுடைய தனிப்பட்ட முறையில், அவர் இப்போது உலகக் கோப்பைக்கு தயாராக இல்லை என்று நான் நினைக்கிறேன்.உலகக் கோப்பைக்கு, நாங்கள் அனுபவம் வாய்ந்த வீரர்களை எடுக்க வேண்டும். வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால் சில வீரர்கள் இதற்கு முன்னதாக இந்தியாவுக்காக விளையாடியிருக்கிறார்கள்.
எனவே, அந்த மாதிரி வீரர்கள் உலகக்கோப்பை போட்டியில் விளையாடினாள் தான் சரியாக இருக்கும். அபிஷேக் சர்மா வருகின்ற உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்தியாவுக்காக விளையாட தயாராக இருக்க வேண்டும். அவர் அதற்காக முழுவதுமாக பயிற்சியில் ஈடுபடவேண்டும். அவரது ஆட்டம் நிச்சயமாக சிறப்பாக உள்ளது. அவரது ஸ்ட்ரைக் ரேட் எல்லாம் ரொம்பவே அருமையாக இருக்கிறது. ஆனால், அவருடைய பேட்டில் இருந்து இன்னும் பெரிய ஸ்கோர்கள் வரவில்லை.
நீங்கள் இந்தியாவுக்காக விளையாடும் இடத்திற்கு போட்டியிட விரும்புகிறீர்கள் உங்களுக்கு ரொம்பவே ஆசை இருக்கிறது என்றால் ஒரு போட்டியில் நிலையாக நின்று பெரிய ஸ்கோரைப் அடிப்பது ரொம்பவே முக்கியம். அவரிடம் பெரிய ஷாட்களை அடிக்கும் அளவிற்கு திறமை இருக்கிறது. ஆனால் அவர் சிங்கிள்ஸ் எடுக்க கற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் ஸ்ட்ரைக் எப்படி சுழற்றுவது என்பதை கற்றுக்கொள்ளவேண்டும்” எனவும் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். மேலும், ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…
சென்னை: அமலாக்கத்துறை சோதனையில் எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர்…
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் இப்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள்…
சென்னை: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் எப்போது தான் வெளியாகும் என 2 ஆண்டுகளுக்கு மேல்…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக…
நார்வே: உலகின் நம்பர்.1 செஸ் வீரரும் ஐந்து முறை உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் தனது காதலியான 26 வயதான…