ஒரே ஓவரில் இத்தனை ரன்களா? யுவராஜ் -பொல்லார்டு சாதனையை சமன் செய்த பூரன்!!

Published by
பால முருகன்

டி 20 உலகக்கோப்பை : 40-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும்  செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சாமி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, பேட்டிங் வந்த ஆரம்பித்த தொடக்கம் முதலே ஆப்கானிஸ்தான் பவுலர்கள் வீசிய பந்தை சிக்ஸர்கள் பவுண்டரிகளுக்கு பறக்க விட்டனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு முதல் விக்கெட் சீக்கிரமாக விழுந்தாலும், 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் பூரனும், சார்லஸும் அதிரடியாக விளையாடினர். அதில் பூரன் 53 பந்துக்கு 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிக்கோலஸ் பூரனுடைய அதிரடியான பேட்டிங் காரணமாக தான் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 218 ரன்கள் எடுத்தது.

போட்டியில்,  முதல் இன்னிங்ஸின் போது ஆப்கானிஸ்தானின் அஸ்மத்துல்லா ஒமர்சாய்க்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணிக்காக பூரன் ஒரு ஓவரில் 36 ரன்கள் எடுத்தார். இதன் மூலம்,  இந்த போட்டியில், நிக்கோலஸ் பூரன் டி20 போட்டிகளில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் எடுத்த சாதனை பட்டியலில் இடம்பிடித்தார்.

டி20யில் ஒரு ஓவரில் அதிக ரன்கள்

  • 2007-ஆம் ஆண்டு (36)-யுவராஜ் சிங் (இந்தியா) vs ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து),
  • 2021-ஆம் ஆண்டு (36)-கிரண் பொல்லார்டு (மேற்கு இந்திய தீவுகள்) vs அகிலா தனஞ்சயா (இலங்கை)
  • 2024-ஆம் ஆண்டு (36) திபேந்திர சிங் ஐரி (நேபாளம்) vs கம்ரன் கான் (கத்தார்).
  • 2024-ஆம் ஆண்டு (36)-நிக்கோலஸ் பூரன் அஸ்மத்துல்லா ஒமர்சாய் (ஆப்கானிஸ்தான்)

மேலும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்த போட்டியில் 98 ரன்கள் நிக்கோலஸ் பூரன் எடுத்த நிலையில், டி20 போட்டிகளில் 2000 ரன்களைக் கடந்த முதல் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

Published by
பால முருகன்

Recent Posts

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

10 mins ago

இந்திய மகளிர் அணி படுதோல்வி..! 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த நியூஸிலாந்து!

துபாய் : இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் 4-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், நியூஸிலாந்து மகளிர் அணியும்…

11 hours ago

“முதலமைச்சர் கோப்பை., 11.53 லட்சம் வீரர்கள்., ரூ.35 கோடி பரிசு.,”  உதயநிதி பெருமிதம்.!

சென்னை : மாநில அளவில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கப்பட்டன. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இந்த…

15 hours ago

சவாலாக அமைந்த தென்னாபிரிக்க வீராங்கனைகள்! 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிருக்கான டி20 உலகக்கோப்பை தொடரில் 3-வது போட்டியானது இன்று துபையில் நடைபெற்றது. இந்த போட்டியில்…

15 hours ago

இன்ஸ்டாவை மிஞ்சிய வாட்ஸ்அப்..! இந்த அம்சம் இங்கும் வரப்போகுது!

சென்னை : மெட்டா நிறுவனம் அடிக்கடி வாட்அப்பில் பயனர்களைக் கவர்ந்த இழுக்கும் வகையில், தொடர்ச்சியாக நல்ல அப்டேட்டுகளை கொண்டு வருகிறது.…

15 hours ago

குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதி பூஜையை வழிபடும் முறை.. !

சென்னை - சரஸ்வதி பூஜை கொண்டாடுவதன் நோக்கம் மற்றும் வித்யாரம்பம் செய்யும் முறையை பற்றி இந்த ஆன்மீக குறிப்பில் காணலாம் …

16 hours ago