ஒரே ஓவரில் இத்தனை ரன்களா? யுவராஜ் -பொல்லார்டு சாதனையை சமன் செய்த பூரன்!!
டி 20 உலகக்கோப்பை : 40-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சாமி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, பேட்டிங் வந்த ஆரம்பித்த தொடக்கம் முதலே ஆப்கானிஸ்தான் பவுலர்கள் வீசிய பந்தை சிக்ஸர்கள் பவுண்டரிகளுக்கு பறக்க விட்டனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு முதல் விக்கெட் சீக்கிரமாக விழுந்தாலும், 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் பூரனும், சார்லஸும் அதிரடியாக விளையாடினர். அதில் பூரன் 53 பந்துக்கு 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிக்கோலஸ் பூரனுடைய அதிரடியான பேட்டிங் காரணமாக தான் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 218 ரன்கள் எடுத்தது.
போட்டியில், முதல் இன்னிங்ஸின் போது ஆப்கானிஸ்தானின் அஸ்மத்துல்லா ஒமர்சாய்க்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணிக்காக பூரன் ஒரு ஓவரில் 36 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், இந்த போட்டியில், நிக்கோலஸ் பூரன் டி20 போட்டிகளில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் எடுத்த சாதனை பட்டியலில் இடம்பிடித்தார்.
டி20யில் ஒரு ஓவரில் அதிக ரன்கள்
- 2007-ஆம் ஆண்டு (36)-யுவராஜ் சிங் (இந்தியா) vs ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து),
- 2021-ஆம் ஆண்டு (36)-கிரண் பொல்லார்டு (மேற்கு இந்திய தீவுகள்) vs அகிலா தனஞ்சயா (இலங்கை)
- 2024-ஆம் ஆண்டு (36) திபேந்திர சிங் ஐரி (நேபாளம்) vs கம்ரன் கான் (கத்தார்).
- 2024-ஆம் ஆண்டு (36)-நிக்கோலஸ் பூரன் அஸ்மத்துல்லா ஒமர்சாய் (ஆப்கானிஸ்தான்)
மேலும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்த போட்டியில் 98 ரன்கள் நிக்கோலஸ் பூரன் எடுத்த நிலையில், டி20 போட்டிகளில் 2000 ரன்களைக் கடந்த முதல் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.